tamilnadu

img

மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஏ.ஜி.காசிநாதன் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

சென்னை:
சிபிஎம் மற்றும் சிஐடியுவின் மூத்த தலைவரான தோழர் ஏ.ஜி.காசிநாதன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு  இரங்கல்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சிஐடியு மூத்த தொழிற்சங்கத் தலைவருமான தோழர் ஏ.ஜி.காசிநாதன் காலமானார் என அறிந்து மிகவும் வருந்தினோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் (எச்.டி.எல்) சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக கட்சிப்பணியிலும், தொழிற்சங்கப் பணியிலும் தீவிரமாக பணியாற்றியவர். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளராக,  மாநில நிர்வாகிகளில் ஒருவராக, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராக, கட்சியின் வடசென்னைமாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர். தற்போது  கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு உறுப்பினராகவும், சிஐடியு மத்திய சென்னை மாவட்டதுணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். `ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் சங்கத்தில் பொதுச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல நிறுவனங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தை உருவாக்கியவர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மறைந்த மூத்தத் தலைவர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம். ஹரிபட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். தோழர் ஏ.ஜி.காசிநாதனின் மறைவு கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

தோழர் ஏ.ஜி.காசிநாதன் அவர்களது மறைவுக்கு செவ்வஞ்சலி செலுத்துவதுடன், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

;