tamilnadu

img

பள்ளி - கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு சிபிஎம் வாழ்த்து.. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுகோள்.....

சென்னை:
கல்வி நிலையங்கள் இன்றுமுதல் (செப்டம்பர் 1) திறக்கப்படு வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாத பள்ளி மற்றும்கல்லூரிகளை தற்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு திறப்பது எனவும், வகுப்பறைகளில் 50 சதவிகித மாணவர்களை மட்டுமே சுழற்சி முறையில் அனுமதிப்பதெனவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாணவர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பும் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை வரவேற்பதோடு, பள்ளிக்கூடங்களில் கழிப்பறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  மாணவர்கள் முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட ஆசிரியர்களும், பெற்றோர் களும் உரிய கவனம் செலுத்திட கேட்டுக் கொள்கிறோம்.  மாணவ - மாணவியர்கள் கூடுதல் அக்கறை செலுத்தி கல்வி பயின்று எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

;