tamilnadu

img

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

சென்னை:
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்குரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்துள் ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுக்கிடங்கின் அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த ஆலையின் பல்வேறு அறைகளில் பேன்சி ரகபட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின் றன. நேற்று வழக்கம்போல் ஆலையின் பட்டாசு உற்பத்தி தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு அறையில்பட்டாசு வைத்து மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீஅடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியகாரணத்தினால் பட்டாசுகள் வெடித்துச்

சிதறியுள்ளது. இதனால் மாரியம்மாள் என்கிற பெண் உட்பட 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர் என்ற செய்தி நெஞ்சைஉருக்குகிறது. இந்த விபத்தில் காயமடைந்த 35 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனதுஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.பட்டாசு ஆலைகளில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததும், இதற்கு பொறுப்பாக உள்ள அரசுத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இப்படிப்பட்ட இழப்புகளை தொடர்ந்து சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படாத வண்ணம்பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்திட வேண்டும். நடைபெற்ற வெடிவிபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும்,. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிடவேண்டுமெனவும், படுகாயமுற்று உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், உரிய இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் அரசின் விதிமுறைகளை கறாராக அமல் படுத்துவதற்கும், வெடிவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கும்தமிழக அரசு தீவிரமான கண்காணிப்புநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், கடமையை செய்யத்தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;