tamilnadu

பள்ளிகள் திறப்பு அறிவிப்பை மறுபரிசீலனை செய்க... முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள்....

சென்னை:
அரசு அறிவித்துள்ள பள்ளி திறப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி துறை ஆணையருக்குதமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை மனு கொடுத்துள் ளது.ஜூன் 14 முதல் தலைமையாசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும். மேனிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கையையும் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.மேலும் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டங் களையும் வழங்க வேண்டுமாய் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த அறிவிப்பை நடைமுறைப் படுத்துவதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள்  மத்தியில் தெளிவான நிலை இல்லை. பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் குழப்பமே நீடிக்கிறது.ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுப் போக்குவரத்து இன்னும் துவங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்களிலும் அலுவலகப் பணியாளர்க ளிலும் ஆசிரியர்களைப் போன்றே பாதிக்கும் மேல் பெண்களாக இருக்கிறார் கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது மிகுந்த சிரமம்.

மேலும், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் அனைவரும் இருந்து கலந்து நடைமுறைப் படுத்த வேண்டியது. இதுதான் வழக்கம். ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை. மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் பொது போக்குவரத்து இன்மையால் வந்து செல் வது கடினம்.9 ஆம் வகுப்பு மதிப்பெண் களை வைத்து பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டி உள்ளது. மேலும் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றும் வழங்க வேண்டி உள்ளது.

இவ்வளவும் எவ்வித குழப்பமும் இன்றி திறம்பட தொற்று பாதிப்பு இல்லாமல் பாதுகாப்போடு  நடைபெற வேண்டுமாயின், தொற்று குறைந்து ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும்.பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். ஆசிரியர் மற்றும் ஏழை, எளிய கிராமப்புற  மாணவர்களும்  பள்ளிக்கு வர வேண்டும். அதன்பின் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பதுதான் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்.  மேலும்  பாதுகாப்பாகவும் இருக்கும், என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.எனவே மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி திறப்பை சுமூக நிலை வந்த பிறகு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று  அறிவிக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதி செய்து குழப்பத்தையும் போக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;