அரசு மருத்துவமனையில் வசதிகள் கோரி
புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம்
புதுச்சேரி, மார்ச்.1- புதுச்சேரி அரசின் பொது மருத்துவமனையில் போதிய நவீன வசதிகளும், போதிய படுக்கைகள், மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாமல் சீர்கெட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே புதுச்சேரி பொது மருத்துவமனையை சீர் செய்திடவும் பெருகி வரும் கொசுக்களால் ஏற்பட்டி ருக்கும் பொது சுகாதார ஆபத்தை தடுக்க கோரியும் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் புதுச்சேரி நகர குழு சார்பில் நடை பெற்ற இயக்கத்திற்கு செயலாளர் ஶ்ரீதர் தலைமை தாங்கினார்.சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பி னர் ஆனந்த் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநில பொரு ளாளர் ரஞ்சித் குமார், மாநிலக்குழு உறுப்பினர் சத்திய வேலன், நகர கமிட்டி பொருளாளர் ஜஸ்டின், கமிட்டி உறுப்பி னர் கமலவேலன் ஆகி யோர் பங்கேற்றனர்.