tamilnadu

img

ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது....

சென்னை:
விலைக் குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்தது.

நடந்து முடிந்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஐந்து முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார்.அதில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டார்.அதன்படி பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் விலை குறைக்கப்பட்ட பால் விற்பனையை ஞாயிறன்று (மே16) தொடங்கி வைத்தார்.பின்னர் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:பொதுமக்கள் ஆவின் பார்லர்கள், சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து  (மே.16) முதல் ஆவின் பால் பெற்றுக்கொள்ளலாம்.சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 40 ரூபாய்க்கும், பால் அட்டைக்கு 37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

சமன்படுத்தப்பட்ட பால் 500 மில்லி லிட்டர் சில் லறை விற்பனை விலையில் 20 ரூபாய்க்கும், பால்அட் டைக்கு 18 ரூபாய் 50 பைசாவுகும் விற்பனை செய்யப்படும்.நிலைப்படுத்தப்பட்டப் பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 22 ரூபாய்க்கும், பால் அட்டைக்கு 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.நிறை கொழுப்பு பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 24 ரூபாய்க்கும், பால் அட்டைக்கு 23 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.இருமுறை சமன்படுத்தப் பட்டப் பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 18 ரூபாய் 50 பைசாவுக்கும், பால் அட்டைக்கு 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

;