tamilnadu

சிதிலமடைந்த வாரிய குடியிருப்புகள் மறுகட்டுமானம்

சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 93, ஆயிரத்தி 891 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பரா மரிக்கப்படுகின்றன. அவற்றுள், 28,643 குடியிருப்புகள் சிதில மடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லு நர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன

இவை அனைத்தும் அடுத்த 3ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும். இதன் முதற்கட்டமாக, 2024-25ம் ஆண்டில் சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மறுகட்டுமானத்திற்குப் பின் இக்குடியிருப்புகள், புதுமையான, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் பழைய குடியிருப்புகளில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கும், இதே திட்டப் பகுதிகளின் அருகில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.