tamilnadu

img

ஏழை-எளிய மக்கள் வாழ்வு மேம்பட திட்டங்கள்: முதல்வர்...

சென்னை:
ஏழை-எளிய மக்களின் வாழ்வு மேம்பட திட்டங்களை வகுக்க வேண்டுமென திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். விவசாயிகளுக்கு நலன் அளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சி சிறக்கவும், முறையான திட்டங்களை வகுத்து அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்” என்றார்.அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டும். திட்டங்களை வகுக்கையில் பல்வேறு துறை வல்லுநர்களையும், செயற்பாட்டாளர்களையும் கலந்தாலோசித்து கருத்துகளைப் பெற வேண்டும். இதன்பின்பு திட்டங்களை இறுதி செய்தால் மட்டுமே அவை சிறப்பான பயன்களை அளிக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.மாநிலத்துக்கான பிரத்யேகமான தரவு அம்சத்தை நிறுவ வேண்டும். மாநில முன்னேற்றத்துக்கான தொலைநோக்குத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறுக்கப் பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண் டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

;