tamilnadu

img

தொழில்நுட்பம் சார்ந்த சமூக கண்டுபிடிப்புகளுக்கு பரிசுத்தொகை

தொழில்நுட்பம் சார்ந்த சமூக  கண்டுபிடிப்புகளுக்கு பரிசுத்தொகை

சென்னை, ஜூன் 18 –   விவோ இந்தியா, நிறுவனம் ‘விவோ இக்னைட்: தொழில்நுட்பம் மற்றும் புதுமை முயற்சி’யின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது . ஜூன் 15 ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 8–12 ஆம் வகுப்பு மாணவர்கள் சமர்பித்த புதிய தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டது.. இதில் பங்கேற்பாளர்கள், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.  விவோ இக்னைட்: தொழில்நுட்பம் மற்றும் புதுமை முயற்சியின் மூன்றாவது பதிப்பு 660க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில் இருந்து 37,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பெற்றது - இது முந்தைய பதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.  ஒடிசாவைச் சேர்ந்த பிரதீக் சேதியின் சென்சார் இல்லாத உணர்திறன் முன்மாதிரி மூலம் ஏஐ மூலம் இயங்கும் குற்றச் செயல் கண்டறிதல் சாதனம்  வெற்றி பெற்றது. அவருக்கு ரூ.4 பரிசாக வழங்கப்பட்டது. 19 இறுதிப் போட்டியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 10 யோசனைகள், அறிவியல் ரீதியாக புதுமையான மற்றும் சமூக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் முன்மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.