சென்னை,டிசம்பர்.13- தமிழ்நாட்டில் குறைந்த விலையில் பொங்கல் தொகுப்புகள் வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி சாதாரண பொங்கல் தொகுப்பு ரூ.199க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது.