tamilnadu

img

கூவம் கரையோரம் குடிசைகள் இடிப்பு- நகரமயமாக்குதல் என்ற பெயரில் அரசியல் ?

சென்னை : சென்னை , அரும்பாக்கம் , ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டன. வாடகை வீட்டில் வசித்தவர்களுக்கு மாற்றுக் குடியிருப்பு  ஒதுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு. 

சென்னை அரும்பாக்கத்தில் ,ராதாகிருஷ்ணன் நகரில் , கூவம் ஆற்றங்கரையோரம் 400க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வந்தன. ஆற்றங்கரையோர குடிசைகள் ,மழை வெள்ளங்களின்  போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது என்று மாற்று இடங்களில் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாகத் தமிழ்நாடு குடிசை பகுதி அகற்றும் வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி,  29.07.2021  அன்று அப்பகுதியில் உள்ள குடிசைகள் இடிக்கப்பட்டன. அங்கே , சொந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு மட்டுமே மாற்றுக் குடியிருப்புக்கான பட்டா வழங்கப்பட்டது. ஆனால் , அந்தப்பகுதியில் 40 வருடங்களுக்கு மேல் வாடகை வீட்டில் வசித்தவர்களுக்கு , உரிய ஆவணங்கள் அனைத்தும் இருந்தும் மாற்றுக் குடியிருப்பு  வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

நகரமயமாக்குதலின் பெயரில் சிங்கார சென்னை திட்டம் , மெட்ரோ ரயில் திட்டம் , பறக்கும் சாலை திட்டம் என்ற வெவ்வேறு பெயர்களில் குடிசைகளை அகற்றுகின்றனர் . நகரம் உருவாவதற்குக் காரணமான இந்த சாமானிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகின்றனர் .  50 வருடங்களுக்கு மேல் அங்கே வாழ்ந்த பூர்வகுடி மக்களை , நகரத்தைத் தாண்டி 40- 50 கிலோமீட்டர்கள் அப்புறப்படுத்துவது சரியென்றால் ,அதே கூவம் கரை ஓரங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் , கார்ப்பரேட் கம்பெனிகள் , உல்லாச விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி தருவது மட்டும் எந்த வகையில் சரியாகும் என்று அதிகாரிகளைக் கேள்வி கேட்கின்றனர் அப்பகுதி மக்கள் .

;