tamilnadu

img

பினராயி விஜயனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து...

சென்னை:
கேரளத்தில் மீண்டும் மகத்தான வெற்றியை இடதுஜனநாயக முன்னணி பெற்றுள்ளது. இதையொட்டி பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து “தோழர் பினராயி” என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள வாழ்த்துப் பா வருமாறு:
விஜயன் என்றால் வெற்றியாளன் மீண்டும் அதை மெய்ப்பித்தீர்; 

வாழ்த்துகிறேன் 

இயற்கை செயற்கை என்ற இருவழி இடர்களை 
இரு கைகளால் எதிர்கொண்டீர்
ஒரு கை கொள்கை
மறு கை உங்கள் ஆளுகை
கேரளத்தின் மழை நனைக்காத பாகத்தையும்
உங்கள் நல்லாட்சி நனைக்கட்டும் 
பச்சைத் தொட்டிலில் கேரளம் 
சிவப்புக் கனவுகள் காணட்டும்.

;