tamilnadu

பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை உயர்வு  

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.104.52 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

கடந்த மாதம் இறுதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் ரூ.100க்கு கீழ் சென்று, மீண்டும் ரூ.100ஐ கடந்து தற்போது ஒரு லிட்டர் ரூ.104 என்ற விலையில் விற்பனையாகிறது.  

மேலும் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 104 ரூபாய் 22 காசுகள் விற்பனையானது. நேற்று டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 25 காசுகள் விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில் பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.104.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

;