tamilnadu

“இரட்டை என்ஜின் வளர்ச்சி” எனும் மதவெறி, சாதிவெறி நச்சுக் கலவை

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பிரதமர் நரேந்திரமோடி தனக்கு மிக வும் பிடித்தமான “இரட்டை என்ஜின் வளர்ச்சி” என்னும் சொற்றொடரை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி இருக்கிறார். உத்த ரப்பிரதேசத்தில் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல்நாட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டபோதே, இவ்வாறு அவர் கூறியி ருக்கிறார். இதன்மூலம் அவர் கூறவிரும்பு வது என்ன என்பது மிகவும் தெளிவாகும். இது மதவெறி மற்றும் சாதிவெறி என்னும் நச்சுக் கலவையே தவிர வேறெதுவும் இல்லை. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதையடுத்து, மோடி-ஆதித்யநாத் தலைமையின்கீழ் பாஜக  மதவெறி-சாதிவெறி நச்சுக் கலவை என்னும் இரட்டை என்ஜினை இயக்கத் தொடங்கி இருக்கிறது. மேற்கு உத்தரப்பிர தேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் நரேந்திர மோடியின் பேச்சு பார்க்கப்பட வேண்டும். இப்போது அவர் பேசும்போதும் இங்கே ஐந்தாண்டுகளுக்கு முன் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்துகொண்டிருந்த நிலைமை இருந்ததாகக் கூறுவதற்குத் தவறவில்லை. இவ்வாறு பயப்படும் சூழ்நிலை இருந்ததால் பலர் தங்கள் மூதா தையர்களின் வீடுகளிலிருந்து ஓடிவிட்டார் கள் என்று பேசினார். பாஜக எம்பி, ஹூக்கும் சிங், 2016இல் சாம்லி மாவட்டத்தில் முஸ்லீம் கிரிமினல்களுக்குப் பயந்து நூற்றுக்கணக் கான குடும்பத்தினர் ஓடி விட்டார்கள் என்று கூறிய பொய்யை எதிரொலிக்கும் விதத்தி லேயே மேற்படி பேச்சு அமைந்திருந்தது.

மகேந்திர பிரதாப் சிங் புரட்சியாளர்

மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது “ஜாட் சிரோமணி”க்கு அளிக்கப்படும் பாராட்டு என்ற விதத்திலும் இந்நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் புகழ்மாலைகள் சூட்டப் பட்டன. மகேந்திர பிரதாப் சிங் ஒரு புரட்சி யாளர். அவர், இதர முஜாஹிதீன்களுடன் சேர்ந்து, 1915இல் ஆப்கானிஸ்தானில் காபூ லில் இந்தியாவிற்கான தற்காலிக அர சாங்கத்தை (provisional government) அமைத்தார்.  அவர் அதன் தலைவராகவும், மௌல்வி பரக்கத்துல்லா அதன் பிரதமராக வும் இருந்தார்கள். அவருடைய சோசலிச மற்றும் மதச்சார்பின்மை கண்ணோட்டம் இவர்களுடைய மதவெறி மற்றும் சாதி வெறி அடையாளங்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. ஆனாலும் பாஜக-வானது ஜாட் இனத்தாரின் மத்தியில் நல்லெண்ணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனை வரும் ஒட்டுமொத்தமாக வேளாண் சட்டங்க ளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக் கக்கூடிய சமயத்தில் இவ்வாறு நடவடிக்கை யில் இறங்கியிருக்கிறது.

ஆதித்யநாத், வழக்கம்போல இப்போ தும் தன் மதவெறி நஞ்சை கக்கி இருக்கி றார். ஒருசில நாட்களுக்கு முன்பு அலிகார் அருகே, குஷிநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் உரைநிகழ்த்தும் போது, இப்போது அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதாகவும், ஆனால் “2017க்குமுன் ‘அப்பா ஜான்’ (‘abba jaan’) என்று அழைக்கப்படும் முஸ்லீம்களுக்கு மட்டுமே கிடைத்து வந்ததாகவும்” பேசி னார். இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக மிக வும் குரூரமான விதத்தில் விஷத்தைக் கக்கி னார். இது முற்றிலும் பொய்யான கூற்று. உத்தரப்பிரதேசத்தின் தரவுகள் அனைத் துமே எந்த அளவுக்கு முஸ்லீம்கள், அத்தியா வசியப் பணிகள் அனைத்திலும் மிகவும் மோசமான முறையில் உரிமைகள் பறிக் கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.

சம உரிமை உள்ளவர்களாக அல்ல

இவ்வாறு இவர்கள் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்திடவும், இழிவானவர்க ளாகக் காட்டவும் நடவடிக்கைகள் மேற் கொண்டிருக்கும் அதே சமயத்தில், உத்த ரப்பிரதேச மாநில அரசாங்கமும், ஒன்றிய அரசாங்கமும் தாங்கள் அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை (“சப்கா விகாஷ்”) மேற்கொண்டு வருகிறோம் என்றும், அர சாங்கத்தின் நலத் திட்டங்களின் காரணமாக அனைத்துத்தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன.  இத்தகைய அணுகுமுறையுடன் பாஜக தலைமையி லான அரசாங்கங்கள் அரசின் திட்டங்களை பிரதமரின் பெயரிலும் கட்சியின் பெயரிலும் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றன.

நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, பாஜக, மோடியின் படத்துடன் 14 கோடி ரேஷன் பைகள் விநியோகிக்கத் தீர்மானித்திருக்கி றது. உணவு தானியங்களை அளிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைத் தங்கள் கட்சி யின் தலைவரைத் துதிபாடுவதுடன் இணைத் திருக்கிறது. பாஜக-வின் நிலப்பிரபுத்துவ சிந்தனை காரணமாக இந்திய மக்கள், அர சாங்கம் அளித்திடும் இனாம்களைப் பெறு பவர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் அனைவரும் சம உரிமை களுடன் நடத்தப்பட வேண்டிய குடிமக்கள் என்று கருதி அவ்வாறு நடத்தப்படுவ தில்லை.

செப்டம்பர் 15, 2021
தமிழில்: ச.வீரமணி



 

;