tamilnadu

img

அரியர் தேர்வு எழுதாமல், எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது – உயர்நீதிமன்றம்    

அரியர் தேர்வு எழுதாத எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை – கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.  

இந்த நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணை தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்து அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.  

மேலும் இறுதி பருவ தேர்வுகளையும், இடைப் பருவ தேர்வுகளையும் நடத்தவில்லை என பல்கலைக்கழக மானிய குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.  தொடர்ந்து தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

;