tamilnadu

img

கிராம மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி அரசுக்கு எதிர்ப்பு.... விவசாயத் தொழிலாளர் வீடுகள் முன்பு மே 26 கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்...

சென்னை:
மே 26 அன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினமாக கடைபிடிக்க வேண்டுமென்ற மத்தியதொழிற்சங்கங்களின் அறை கூவலுக்கிணங்க அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏந்தியும் - வீடுகளில் கட்டியும் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொது செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அனைத்து விவசாய முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வரும் மே 26 அன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினமாக கடைபிடிக்கவேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஏழு ஆண்டுகால பாஜகஆட்சியில் கிராமப்புற - நகர்ப்புற உழைக்கும் மக்களின் உரிமைகள் மிகப்பெரிய அளவிற்குப்பாதிப்புக்குள்ளான காலங்களா கும். விவசாயத்துறையை மிகமோசமாக சீரழித்து கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரைவார்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது நாடு சந்தித்து வரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தேசத்தின் மக்களைப் பாதுகாப்பதிலும் மோடி அரசு கார்ப்பரேட் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. மக்களின் உயிரை விட கம்பெனிகளின் விசுவாசமே தனக்கு பெரிதென மோடி அரசு கருதுகிறது.

கொரோனா கால ஊரடங்கால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளுக்கு உரிய வகையில் உதவிட மறுத்து வருகிறது. வேலையிழந்துள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட நாள்களை 200 நாள்களாகவும் தினக்கூலி ரூ.600 ஆகவும் உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து கவலைப்படாத மோடி அரசு, திட்டத்தை மேலும் மேலும் சிதைத்து வருகிறது.

மே 26 கருப்பு தினம் கடைபிடிக்கும் இயக்கத்தில் அகிலஇந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கமும் ஆதரித்து முழுமையாக பங்கேற்கிறது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள்  வீடுகளுக்கு முன்பு வீதிகளில் கருப்புக்கொடி ஏந்தி - தனிமனித இடைவெளியைப் பின்பற்றிகோரிக்கை முழங்கிட வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம்.6 மாதங்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்திடவேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தி, அனைவருக்கும் தடுப்பூசியும் போடவேண்டும்.கொரோனா கால நிவாரணமாக வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வழங்கிட வேண்டும். ஊரக வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாகவும் - தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்திட வேண்டும் . பேரூராட்சிப் பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் நபருக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;