மதுராந்தகம், மே 19-தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றி,மறைந்த தோழர் முனிசாமியின் முதலாமாண்டு நினைவேந்தல், உருவ சிலை திறப்பு விழா சனிக்கிழமையன்று (மே 18)வேடந்தாங்கல் ஊராட்சி சித்திரக் கூடம் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.தோழர்முனிசாமியின் உருவ சிலையை மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் ப.பாரதி அண்ணா, செயலாளர் வாசுதேவன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா, புதிரை வண்ணார் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நேரு, வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பிரியசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.