அவசர உதவி மையங்கள் திறப்பு
சுற்றுலாப் பயணிக ளுக்காக அவசர உதவி மையங்கள் அமைக் கப்பட்டு, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உதவி அல்லது தகவல் தேவைப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக அனந்த்நாக் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பிரத்யேக உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.
தொடர்பு விவரங்கள்: 9596777669, 01932225 870, வாட்ஸ்அப்: 9419051940 ஆகிய எண்களில் தொடர்பு கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, ஸ்ரீநகர் - அவசர கால கட்டுப்பாட்டு அறையை, 0194-2457543, 0194-248 3651 ஆகிய எண்கள் மூலமாக வும், ஸ்ரீநகர் காவல்துறை கூடு தல் துணை ஆணையர் அடில் பரீத்தை 7006058623 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள லாம். 35 பேர் தமிழகம் திரும்பினர் பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் காயம் அடைந்திருப்பதாக கூறப் பட்ட நிலையில், அவர்களை பத்தி ரமாக மீட்க, தமிழ்நாடு அரசும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையத்தை அமைத்து, 011-24193300 (LandLine) மற்றும் 9289516712 (வாட்ஸ்ஆப் உடன் கூடிய எண்) ஆகிய உதவி எண் களை அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கூடு தல் வளர்ச்சி ஆட்சியர் அப்தாப் ரசூல் பஹல்காமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அங்கு சுற்றுலா சென்றிருந்த- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.