tamilnadu

img

மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: முதல்வர்‌....

சென்னை:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தலைமையகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டால் தொழில்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

;