tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை... அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்....

சென்னை:
புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதின் மீதான கருத்துகளையும், பரிந்துரைகளையும் மத்திய அரசிற்கு தெரிவிக்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், ‘மத்திய அரசின் கல்வி அமைச்சர் தலைமையில் மாநிலங்களின் கல்வித் துறை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கோவிட் நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணையதள வழி கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தவதின் நிலை போன் றவை குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இச்சூழலில், மத்திய அரசிற்கு 15ஆம் தேதி நான் எழுதிய கடிதத்தில், இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை தமிழ்நாடு அரசின் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும். அந்தக் கூட்டத் தில் மாநில அரசின் சார்பில் முக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துவதின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தயாராக உள் ளேன்’ எனக் கூறியுள்ளார்.

;