ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரனை சிறையிலேயே செம்பியன் போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் ஏற்கனவே வேறு ஒரு கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரனை கைது செய்வதர்கான ஆணையை வேலூர் சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்கினர்.
இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஸ்வத்தாமனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.