tamilnadu

img

நவீனமயமாகும் மந்தைவெளி பேருந்து முனையம்

நவீனமயமாகும் மந்தைவெளி பேருந்து முனையம்

சென்னை, ஜூன் 12- சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம் , ரூ.151 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது.  சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் இந்த பணியை மேற்கொள்கிறது. இங்கு சில்லறை கடைகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்பட உள்ளன. மெட்ரோ  ரயில் நிலையம், பேருந்து நிலையம் இரண்டும் ஒரே இடத்தில் அமைய வுள்ளது. இது பயணிகளுக்கு மிக வும் வசதியாக இருக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னம் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனம் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், மந்தை வெளி பேருந்து முனையம் மற்றும் பணி மனையில் நவீன மேம்பாட்டு கட்டிடத் திற்கான ஒப்பந்தத்தை ரூ.151 கோடி  மதிப்பில் (ஜிஎஸ்டி மற்றும் தற்கா லிகத் தொகை உட்பட) கோரி யுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3இல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு - வெளியேறும் கட்ட மைப்புகள், தற்போதைய மந்தை வெளி பேருந்து நிலையம் மற்றும் பணி மனை வளாகத்திற்குள் திட்டமிடப் பட்டுள்ளன. இந்த நிலத்தை பயனுள்ள  முறையில் பயன்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு - வெளி யேறும் இடம், பேருந்து நிறுத்தம் மற்றும் புறப்படும் இடத்துடன் ஒருங்கி ணைக்கப்பட்ட சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கி ணைந்த வளர்ச்சி கட்டடம் கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதி கிடைக்கும். இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 29,385 சதுர மீட்டர் ஆகும். இங்கு இரண்டு கட்டடங்கள் அமையவுள் ளன. இரண்டு கட்டிடங்களிலும் சூரிய மின் தகடுகள் பொருத்தப்படும். இதன் மூலம் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இது சென்னையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.   நிலம்-1: 3,031 சதுர மீட்டர் (0.745 ஏக்கர்), நிலம்-2: 3,594 சதுர மீட்டர் (0.88 ஏக்கர்). நிலம் 1இன் மொத்த கட்டிட பரப் பளவு 13,419 சதுர மீட்டர். நிலம் 2இன் கட்டிட பரப்பளவு 15,966 சதுர மீட்டர். இந்த இரண்டு இடங்களும் ராம கிருஷ்ண மடம் சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் இருந்து எளி தில் அடையும் வகையில் அமைக்கப் படுகின்றன. கோபுரம் - A கட்டிடத்தில் இரண்டு தளங்கள் வாகன நிறுத்துமிடமாக இருக்கும். இங்கு 184 இருசக்கர வாக னங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாக னங்கள் நிறுத்த முடியும். தரை தளத்தில் இருந்து ஏழாவது தளம் வரை வணிக மற்றும் அலுவலக இடங்கள் இருக்கும். பெரிய அலுவலகங்கள், வர வேற்பு அறைகள் மற்றும் கடைகள் போன்ற வசதிகள் இருக்கும். கோபுரம் - B கட்டிடத்தில் இரண்டு தளங்கள் வாகன நிறுத்துமிடமாக இருக்கும். இங்கு 318 இருசக்கர வாக னங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாக னங்கள் நிறுத்த முடியும். தரை தளத்தில் இருந்து ஏழாவது தளம் வரை கடைகள் இருக்கும். வரவேற்பு அறை கள் மற்றும் அத்தியாவசிய தேவை களுக்கான இடங்களும் இருக்கும்.