tamilnadu

img

தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்....

சென்னை:
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜின் உடல்நலம் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நேரில் நலம் விசாரித்தனர்.கொரோனா தொற்று காரணமாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தெடர்ந்து 7ஆம் தேதி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் அமைச்சரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ் ணன் ஆகியோர் சென்று அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

;