tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

மெட்டா நிறுவனத்தின் புதிய ஏ.ஐ சாட்பாட் அறிமுகம்!
மெட்டா நிறுவனம், மெட்டா ஏஐ (Meta AI) எனும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் தளங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடி, ஜெமினி ஆகிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை போலவே மெட்டா ஏஐ சாட்பாட்டிலும், டெக்ஸ்ட் வடிவில் தகவல்களை பெறவும், படங்களை உருவாக்கவும் முடியும்.

இந்த சாட்பாட் படங்களை GIF  வடிவிலும் உருவாக்கி தருகின்றது. ‘Llama 3 Large Language Model’ அடிப்படையில் மெட்டா ஏஐ செயல் படுகிறது. இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள search  barஐ கிளிக் செய்தால் “Meta AI Ask Anything” என்று  ஒரு பாப்-அப் காண்பிக்கும். அதனை கிளிக் செய்து சாட்பாட்டுடன் உரையாடலாம். அதேபோல வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரிலும் சாட் menu-வில் இந்த சாட்பாட்டு டன் உரையாடலாம்.

 Meta AI வசதி ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரே லியா, கனடா, கானா, ஜமைக்கா, மலாவி, நியூசிலாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடு களில் கிடைக்கிறது. இந்தியாவில் சிறிய அளவிலான பய னர்களுக்கு மட்டும் சோதனை முறையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக் கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவின் சைபர் செக் யூரிட்டி அமைப்பான CERT-In, கூகுள் குரோம்-இன்  டெஸ்க்டாப் பதிப்பில் மால்வேர் கள் தாக்கக்கூடிய அபாயம் இருப் பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மால்வேர்கள் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல் கள் ஹேக் செய்யப்படும் என்று CERT-In தெரிவித்துள்ளது. Windows மற்றும் Mac இயங்குதளங்களுக்கான 124.0.6367.60க்கு முந்தைய குரோம் பதிப்பில் மால்வேர் மூலம் கணினிகள் மற்றும் லேப்டாப்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

குரோமை பாதுகாப்பாக பயன்படுத்த சில வழிமுறைகளை மேற்கொள்ளலாம்:

குரோமை  உடனடியாக அப்டேட் செய்யவும். குரோம் வெர்ஷன் 124.0.6367.60 அப்டேட் செய்யவும்.

சந்தேகத்திற்கிடமான இணையதளங்களைப் பார்வையிடுவதையும், இ-மெயில் வரும் தெரியாத லிங்குகளை கிளிக் செய்வதையும் தவிர்க்க வேண்டும். 

புதிய விண்டோஸ் ஓபன் செய்யும் போது பாப்-அப்களை பிளாக் செய்ய வேண்டும்.

Cache and browsing data-வை தொடர்ச்சியாக நீக்க வேண்டும்.

இமெயில் கணக்குகள் மற்றும் சாதனங்களைப் பாதுகாக்க, வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்ட்கள் பயன்படுத்த வேண்டும்.

ஃபயர்வால் மற்றும் வைரஸ் தடுப்பு பாதுகாப்புடன் கூடிய ஆண்டிவைரஸ்களை பயன்படுத்தலாம்.

விரைவில் இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் வீடியோவை பகிரும் வசதி!

வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இல்லாமல் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது.

இண்டர்நெட் இணைப்பைத் தவிர்த்து Local நெட்ஒர்க்-ஐ பயன்படுத்தி படங்கள், கோப்புகள் மற்றும் வீடியோக்களை பகிரும் அம்சத்தை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருகிறது. கூடுதலாக, ‘contact note’ என்ற அம்சத்தையும்  சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தனிநபர்களுக்கு தனிப்பட்ட குறிப்புகளை அனுப்ப முடியும்.