tamilnadu

img

மேகதாது அணை அனுமதிக்கப்படாது... தமிழக அரசு....

சென்னை:
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தைதமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டம் பற்றிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 21.5.2021 தேதியிட்ட ஆணை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

15.4.2021ஆம் நாளிட்ட டைம்ஸ் ஆப் இந்தியாஆங்கில நாளேட்டில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஆரம்பகட்டப் பணிகளை செய்து வருவதாக செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் மேகதாதுஅணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, வனத் துறை, மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் வனப்பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006-ஆம் ஆண்டைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி உரிய அனுமதியை பெற்றுள்ளதா என்பதை அறிவதற்காக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்துஅசல் விண்ணப்பம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வு செய்து தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழு, மேகதாது அணை கட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதன் அறிக்கையை 5.7.2021 க்கு முன்பாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த குழுவிற்கு கர்நாடகத்தின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தேவையான வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 11 பிரதிவாதிகள் சேர்க்கப் பட்டுள்ளனர்.  அதில், தமிழ்நாட்டிலிருந்து  காவிரிநீர் மேலாண்மை ஆணையமும் ஒரு பிரதிவாதியாகும். இவ்வழக்கின் பிரதிவாதிகளின் பதில் மனுக் களை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு மறு விசாரணையை 5.7.2021 அன்றைய தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்தியநீர்வள குழுமம் அனுமதி அளித்ததை திரும்பப்பெறவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை ஆணை வழங்கக் கோரியும் தமிழ்நாடுஅரசு 30.11.2018 அன்று மனு ஒன்றினை உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளது.இதற்கிடையில், இத்திட்டத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க எடுத்துக் கொள்வதாக தெரிய வந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில், அடுத்தடுத்து நடைபெற்ற ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது அணைப் பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப் படவில்லை.இந்த பிரச்சனை குறித்து, தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாஅரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;