tamilnadu

img

கேரள வெற்றி: உண்மையை கண்டறிய முன்வராத எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்....

திருவனந்தபுரம்:
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஜஐமு மற்றும் பாஜகவுக்கு கிடைத்துள்ள தோல்வி குறித்து எதிர்க்கட்சிகளிலும் ஊடகங்களிலும் பெரும்பாலும் உண்மைகளை தொடாத விவாதங்களே நடைபெற்று வருகின்றன. கட்சிகளின் குழு மோதல்களும் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் ஏற்பட்ட குழப்பமும் தேர்தல் தோல்விக்கு காரணம் என சித்தரிக்கும் முயற்சியாக இது உள்ளது. ஆனால், இஜமுன்னணி அரசுக்கு மக்கள் தங்களது இதயத்தில் எதனால் இடமளித்தனர் என்கிற அடிப்படையான காரணங்களை அவர்கள் யாரும் பார்க்கவில்லை.  

வாக்குறுதி நிறைவேற்றப் பட்டதும், மக்கள் அனைவரையும் சமமாக பாவித்து ஒன்றிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது இதற்கு காரணம் என பல்வேறு கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசாங்கத்தின் மிகச் சிறந்த பணி வலுவான தலைமை - இதைத்தான் மக்கள் அவர்களது கண் முன்னால் பார்த்தார்கள். தி இந்து நாளிதழும் லோக் நீதி - சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பின் கண்டுபிடிப்புகள் இதை தெளிவுபடுத்தியுள்ளன. மாறிமாறி ஆட்சி என்கிற போக்கை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் தேசிய அளவில் இடதுசாரிகளுக்கு பெரும் செல்வாக்கு ஏற்படும். என்டிஏ-வுக்கு மாற்றாக உயர முடியும் எனவும் இந்த தேர்தல் முடிவு தெளிவுபடுத்தியுள்ளது.எழுபத்து மூன்று சதவிகிதம் பேர் அரசாங்கத்தின் செயல்திறனில் திருப்தி அடைவதாகக் கூறினர். கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பால் அரசாங்கம் மக்களின் ஆதரவைப் பெற்றது என்பதை இது காட்டுகிறது.

தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக்கணிப்புகளில், 45 சதவீதம் பேர் இடது ஜனநாயக முன்னணியை  வெளிப்படையாக ஆதரிப்பதாகக் கூறினர். சிறந்த முதல்வர் யார் என்று கேட்டதற்கு, 36 சதவிகிதம் பேர் பினராயி விஜயன் என பதிலளித்தனர். 18 சதவிகிதம் பேர் மட்டுமே உம்மன் சாண்டியை ஆதரித்தனர். ரமேஷ் சென்னித்தலாவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இ.ஸ்ரீதரனுக்கும் இரண்டு சதவிகிதம் மக்களே ஆதரவு தெரிவித்திருந்தனர். வாக்களித்த பின்னர், 61 சதவிகிதம் பேர் கட்சி பார்த்துதான் வாக்களித்ததாகக் கூறினர்.படித்த வாக்காளர்கள் முன்பு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டபோது ஆதாரங்கள் எங்கே என்று அவர்கள் சிந்தித்தனர். சபரிமலை பிரச்சனை ஒரு சதவிகிதம் மக்களைக்கூட பாதிக்கவில்லை. ஆனால், இரண்டு பெருவெள்ளங்கள், நிபா, கோவிட் காலங்களில் அரசாங்கம் என்ன செய்தது என்பதை மக்கள் சரியாக நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வுகள் காட்டுகின்றன.

பட உதவி : நன்றி தேசாபிமானி 

;