tamilnadu

img

கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

சென்னை, ஆக.13- முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோ ருக்கு அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் - கலை ஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பில் பல் வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கருணா நிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் கடந்த ஜூன் 4-ம் தேதி ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இந்த நாணயத்தை அதி காரப்பூர்வமாக வரும் ஆக. 17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக  அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, ஐயு எம்எல், மமக, மதிமுக, தமிழக வாழ்வுரி மை கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலை வர் அண்ணாமலைக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தவிர, ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கான அழைப்பிதழ் வழங்கப் பட்டுள்ளது.