tamilnadu

சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு....

 1 ஆம் பக்கத் தொடர்ச்சி....

மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.எனவே, இத்தகைய கொடுமையை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த அரசை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்துவதோடு, பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலை போன்று பாஜகவையும், அதிமுகவையும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “பல மாநிலங்களில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பாஜக கவிழ்த்தது. அதுபோல, பாண்டிச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மூலம் எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள். கிரண்பேடிவாயிலாகவே ஆட்சி கவிழ்ந்தால் அம்பலப்படுவோம் என்பதால்,தெலுங்கானா ஆளுநரை கொண்டு வந்துள்ளனர்.“பாண்டிச்சேரியில் துணை நிலை ஆளுநர் இல்லாதபோது தமிழக ஆளுநரைத்தான் பொறுப்பாக நியமிப்பார்கள். மாறாக, தற்போது தெலுங்கானா ஆளுநரை பொறுப்பாகநியமித்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்பு வேலையை விரைவாக செய்து முடிக்கவே இந்த நியமனம் நடந்துள்ளது” என்றார்.

சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்க!
“நுண்நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் சுயஉதவிக்குழுக்கள் கடன் பெற்றுள்ளன. கடன்களை வசூலிக்கவீடுகள், டிராக்டர்களை ஜப்தி செய்வது, பெண்களை கேவலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மூர்க்கத்தனமாக ஈடுபடுகின்றனர். விவசாய கடன்களை ரத்து செய்தது போன்று,  சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். வேல்முருகன், வே. ராஜசேகரன், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;