tamilnadu

img

நீதிபதி வைத்தியநாதன் மேகாலயாவுக்கு மாற்றம்

சென்னை,பிப்.3- மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி, ஓய்வு பெற்றதை யடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்திய நாதனை, மேகாலயா உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக நிய மிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் அண்மையில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.

நாட்டில் பெரிய உயர்நீதிமன்றங் களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தற்போது ஒரே ஒரு நீதிபதி மட்டுமே தலைமை  நீதிபதியாக பதவி வகிப்பதால், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், மேகா லயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்து கொலிஜியம் வெளியிட்ட அறிவி ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி எஸ். வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நியமித்து குடியரசுத் தலை வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக  குறைந்து காலியிடங்களின் எண் ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள் ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு வழக்க றிஞராக பணியை தொடங்கிய நீதிபதி வைத்தியநாதன், 2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.