எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Junior Assistants
காலியிடங்கள்: 200
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: ஆந்திரம் - 12, அசாம் - 5, சத்தீஸ்கர் - 6, குஜராத் - 5, இமாச்சலப் பிரதேசம் 3,ஜம்மு மற்றும் காஷ்மீர் - 1, கர்நாடகம் 38, மத்தியப் பிரதேசம் 12, மகாராஷ்டிரம் - 53, புதுச்சேரி - 1, சிக்கிம் - 1, தமிழ்நாடு 10, தெலங்கானா - 31, உத்தரப்பிரதேசம் - 17, மேற்கு வங்கம் - 5,
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 32,800
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2024
மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/static-assets/pdf/Detailed_Advertisement_Recruitment_of_Junior_Assistants_2024.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true