tamilnadu

img

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகிதம் ஒதுக்கீடு 50 சதவிகிதம் வரம்பிற்குள் வருகிறதா - உயர்நீதிமன்றம் 

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்தாண்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதமான இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில்,  இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்க வேண்டுமெனவும் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை அமல்படுத்தாத நிலையில், மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி இந்தாண்டுக்குள்ளாவது உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்
டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் ஒருவாரத்திற்குள் ஒன்றிய அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, ஒன்றிய
அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான ஒப்புதலை வழங்கியது. மேலும், நடப்பு கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவப்படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான
10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

;