tamilnadu

img

முடியப்போகிறது குட்கா அரசின் ஆட்டம்.... மு.க.ஸ்டாலின் கருத்து....

சென்னை:
குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனைஎதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏ க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.இந்நிலையில் சட்டமன்றத்திற்குள் குட்கா பொருட்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் பேரவை உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 10 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.  

இதுகுறித்து  தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டுசென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக் கொண்டு அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக் கான உரிமையையே பறிக்க நினைத் தார்கள்.முதல் முறையே இந்த நடவடிக்கைக்கு தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டிஇருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது! குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்!.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;