tamilnadu

இலவச கட்டாயக் கல்வி: விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, ஏப்.22- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்  கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ், வாய்ப்பு மறுக்கப்  பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமி ழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிக்  கல்வித்துறையே கல்விக் கட்டணத்தை செலுத்தும். அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 முதல் rte.tn schools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். மே 20 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்தது, பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளி யிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில்  விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படு வார்கள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020  ஆகஸ்ட் 1 முதல், 2021 ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிறந்தி ருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தை கள் 2018 ஆகஸ்ட் 1 முதல், 2019 ஜூலை 31-ஆம்  தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம்  ரூ.2 லட்சத்துக்கு குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்று களுடன் விண்ணப்பிக்கலாம்.

;