சென்னை,ஜன.7- இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜனவரி 7 ஞாயி றன்று செங்கல்பட்டில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத் தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளராக கோ. அரவிந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவ ராக குமரவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர் களாக சௌமியா, ஷாலினி, பிரவீன், அருண், பவித்ரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
முன்னதாக செங்கல்பட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் பள்ளி மாணவர்கள் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழ கம் முழுவதும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.