tamilnadu

img

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்...

சென்னை:
அமைச்சர் காமராஜ் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.அதன்பின்னர், கடந்த 7 ஆம் தேதி அமைச்சர் காமராஜூவுக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை எடுக் கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. ஓரிரு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையையும் கொண்டாடினார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து மியாட் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகமாக இருந் ததன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே இருந்தது.இதனால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இதற்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் கொண்டு செல்லப் பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவருடைய உடல் நிலை குறித்த எம்.ஜி.எம். மருத்துவமனையின் உதவி இயக்குனர் மருத்துவர் அனுராதா பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 19 ஆம் தேதி இரவு அமைச்சர் ஆர்.காமராஜ் வென்டிலேட்டர் உதவியுடன் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை அனுமதித்து சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், கொரோனாவால் நுரையீரல் செயல்பாடுகளில் மாற்றம் அதிகமாக இருக்கிறது. அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு, சிகிச்சை நடைமுறைகள் சரியான அளவில் நடைபெற்றன. அவருடைய உடல்நிலை இப்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நாடித்துடிப்பு போன்ற அனைத்து உறுப்பு செயல்பாடுகளும் நிலையாக உள்ளது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

;