tamilnadu

img

பல்வேறு படிப்புகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை உடனே வாபஸ் பெறுக... மத்திய அரசுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

சென்னை:
கூட்டாட்சி விதிகளுக்கு எதிராக செயல்படும் மத்தியபாஜக அரசு, பல்வேறு படிப்புகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மத்திய அரசு புதிய கல்வி கொள்கைக்கான முன்னெடுப்புகளை தொடங்கியது முதலாகவே அதன் பாதக நோக்கங்களையும், அம்சங்களையும், அவை
ஏற்படுத்தப் போகிற விளைவுகள் குறித்தும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து பல்வேறு வகைகளில்  இயக்கங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.அதன் விளைவாக தமிழகத்தில் மிக முக்கியமான விவாதப் பொருளாக கல்வி மாறியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலிலும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பதுபிரதான அம்சமாக மாறி இருக்கிறது.தற்போது சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள், செவிலியர் கல்வி மற்றும் உயிரி அறிவியல் பட்டப் படிப்புகளுக்காக விஸ்தரிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை  மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது.யுனெஸ்கோ நிறுவனம்  ‘கல்வியில் சர்வதேச தரம்’என்று ஒன்றை நிர்ணயம் செய்வது மிகவும் கடினம் என்கிறது.  ஒரு நாட்டின் கல்வி முறை மற்றும்  பாடத்திட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப அந்தந்த நாட்டின்  கல்வித்தரம்  மாறும்.  இதுதான் முன்னுதாரணமான கல்வித்தரம் என்று எந்த நாட்டின் கல்வி முறையையும்   குறிப்பிட்டுக் கூற முடியாது ‌என்கிறது யுனெஸ்கோ.   ஆனால்,தற்போதைய மத்திய அரசு உருவாக்கியுள்ள, தேசியதிறன் பரிசோதனை முகமை,  உயர் கல்வி பயில விரும்பும்  இந்திய மாணவர்களின்  சர்வதேச தரத்தைபரிசோதனை செய்வோம் என்கிறது.உலகெங்கும் இல்லாத ஒரு தரத்தை, இந்திய மாணவர்கள், அவரவர் மாநில அரசுகள், அதன் நிதியிலும்  ஆளுகையிலும் நடத்தி வரும்  கல்வி  நிறுவனங்களில் அமலாக்கம் செய்யும் என்பது  யுனெஸ்கோ போன்ற கல்வி சார்ந்த சர்வதேச நிறுவனங்களின் தீர்மானங்களுக்கும், இந்திய கூட்டாட்சி விதிகளுக்கும்,  சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளுக்கும், சமூக நீதிப் போராளிகளின் தியாகங்களுக்கும் எதிரானது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கையை ஆராய மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குழுவிற்கு ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இன்னும் பல மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை சட்ட மன்றங்களில் விவாதிக்கப்படக் கூடஇல்லை. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வே “கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது”  என்று போராடி வரும்நிலையில், செவிலியர் கல்வி மற்றும் உயிரி அறிவியல்என்று விஸ்தரித்து இருப்பதும் மிகவும் அநீதியானது. அது கல்லூரிகளில் விலங்கியல், தாவரவியல் தொடங்கி  உயிரி தொழில்நுட்பம் ,மரபணுவியல் எனநீள்கிறது. இந்தப் படிப்புகளுக்கான தேவை என்ன என்பது கூட வரையறை செய்யப்படவில்லை.மத்திய அரசு, புதியகல்விக் கொள்கை வழியாக முன்னெடுக்கும் இத்தகையநடவடிக்கைகள்  இந்தியாவின் பள்ளிக் கல்வி முறைக்கு எதிரானது.தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வு என்பதுஉயர் கல்வி விரும்புவோருக்கு கூடுதல் சிக்கல்களையும்  கூடுதல் பண விரையம் மற்றும் கால விரையத்தையும் ஏற்படுத்துகிறது. 

பள்ளி மையக் கல்வி என்பதற்கு மாற்றாக பயிற்சி மையக் கல்வியை நோக்கிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகிறது. நுழைவுத் தேர்வு முறை என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி நிலையங்கள் மூலம் கொள்ளையடிக்க வாய்ப்பு அளிக்கிறது.கிராமப்புற ஏழை மாணவர்கள், பட்டியலின மாணவர்கள், விளிம்பு நிலை மாணவர்கள் அனைவரும் பயிற்சி பெற முடியாத சூழ்நிலையில் இது போன்ற கல்வி வாய்ப்பினை இழக்கும் நிலையை அரசே உருவாக்க வழிவகுக்கிறது.கூட்டாட்சி மாண்புகள், சமவாய்ப்பு, சமநீதி  மற்றும்எந்தவித தர்க்க ரீதியான நியாயங்களும் இல்லாத இந்த “நீட் போன்ற  மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை” மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;