tamilnadu

img

அறநிலையத்துறையின் 79 பி சட்டத்திருத்தத்தை உடனே திரும்பப்பெறக் கோரிக்கை

விவசாயிகள், குடியிருப்புவாசிகளுக்கு விரோதமானது அறநிலையத்துறையின் 79 பி சட்டத்திருத்தத்தை   உடனே திரும்பப்பெறக் கோரிக்கை

சென்னை,செப்.17-   கோயில் மனையில் குடியிருப்பவர் கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விரோதமான அறநிலையத்துறையின் 79 பி சட்டத்திருத்தத்தை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில அமைப் பாளர்  சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு: தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கோயில், மடம், அறக் கட்டளைகளுக்கு சொந்தமான இடங் களில் குடியிருந்தும், நிலங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். காடு, மேடாக இருந்த நிலங்களை சரிசெய்து குடி யிருப்பு பகுதியாகவும், விவசாய நிலங் களாகவும் மாற்றி பயன்படுத்தி வருகின்ற னர்.  பல தலைமுறைகளாக குடியிருப் பவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் உள்ள சட்டப்பிரிவு 78,79,79பி, போன்றவற்றை நீக்க வேண்டும் என பயனாளிகள் கோரி வந்த நிலையில் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறநிலையத்துறை அமைச்சர் “2021ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து  சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்த) சட்டம் என ஒன்றை கொண்டு  வந்துள்ளார்.

அதில் ஏற்கனவே உள்ள 79பி, ஆவது பிரிவில் 3, மற்றும் 4 உட்பிரிவுகளில் ஆக்கிரமிப்பாளர் மீது துறையின் ஆணையர் எழுத்துப்பூர்வமாக ஆக்கிரமிப்பாளர்கள் என புகார் கொடுத்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்க லாம். இதை தற்போது திருத்தி 79பி, சட்டபிரிவின் படி ஆக்கிரமிப்பாளர் என்று  அடையாளப்படுத்தப்படும் நபர் மீது  சமய நிறுவனத்தின் பொது விவகாரங் களில் ஆர்வம் கொண்டுள்ள நபர் யார்  வேண்டுமானாலும் புகார் கொடுக்க லாம். புகாரின் படி பிணையில் வர முடியாத கிரிமினல் குற்றவியல் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோயில் மனை யில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏழை, நடுத்தரப் பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் இது துறையில் உள்ள  ஒரு சில அதிகாரிகள் மற்றும் சமூகத்தில்  உள்ள சுயநல சக்திகள் இச்சட்டத்தை தவ றாக பயன்படுத்த வாய்ப்பாக அமைந்து விடும். கோயில் சொத்துக்களை வரம்பு மீறி  ஆக்கிரமித்துள்ள செல்வாக்குப் படைத்த வர்களிடம் உள்ள சொத்துக்களை மீட்பது குறித்து நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. அதற்கான முறையில் அரசு நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எப்போதும் வர வேற்போம், ஆனால் பொத்தாம் பொது வாக இப்படி சட்டத் திருத்தம் கொண்டு வருவது நடைமுறையில் ஏழை, நடுத்தரப் பகுதி பயனாளிகளுக்கு எதிராகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். மத வாத அமைப்புகள் இதை பயன்படுத்திக் கொண்டு சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும், மோதலையும் உரு வாக்குவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். ஏற்கனவே இவர்கள் அறநிலையத்துறையே கலைக்கப்பட வேண்டும், ஆலயங் களையும் அதன் சொத்துக்களையும் எங்களிடமே ஒப்படைக்க  வேண்டும் என கூக்குரலிடுகின்றனர்.

 அரசாணை 318-ஐ தெளிவுபடுத்துக! 

எனவே தமிழக அரசு லட்சக்கணக் கான பயனாளிகளின் நலன் கருதி இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  மேலும் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 318யை செயல் படுத்துவதற்காக சட்டமன்றத்தில் துறையின் மானியக்கோரிக்கையின் விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் அரசின் சார்பில்   சீராய்வு  மனு தாக்கல் செய்யப்பட்டு  அரசாணை 318-யை செயல்படுத்துவோம் என அறி வித்தார். ஆனால் தற்போது கோயில் இடங்களில் குடியிருப்பவர் களுக்கு பட்டா கொடுக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று அமைச்சர் முன்னு க்குப் பின் முரணாக பேசி வருகிறார்.  எனவே பல தலைமுறைகளாக கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழை களுக்கு அரசாணை 318ன் படி பட்டா  வழங்குவது குறித்து தமிழக அரசின்  நிலைபாடு என்ன என்று தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 


 

 


 

;