tamilnadu

img

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளத் தமிழக மற்றும் புதுவை அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்
தார்.  மேலும், அந்த மனுவில், சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்
படுத்தச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனவும்  தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தமிழக அரசு சார்
பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். 

மேலும், மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

;