tamilnadu

img

மோடி அரசின் மோசடி... மாற்றுத்திறனாளிகள் கொந்தளிப்பு....

சென்னை:
மத்திய பாதுகாப்புத்துறை எந்த ஒரு பணிகளும் மாற்றுத்திறனாளி களுக்கு இனி 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை பறித்துள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் பாதுகாப்புப் படை சார்ந்த வேலைவாய்ப்புகளில் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதேச்சதிகாரமான முறையில் மோடி அரசு பறித் துள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டத்தையும் மீறி இந்த நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அரசுப் பணிகளில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு ஒன்றிய - மாநில அரசுகளின் அனைத்துப் பணிப் பிரிவுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் புதன்கிழமையன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப், இந்தோ - திபெத்எல்லைக் காவல் படை, அசாம்ரைபிள்ஸ், சஷாஸ்த்ரா சீமா பல் ஆகிய ஒன்றிய போலீஸ் படைகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தில்லி, அந்தமான் - நிகோபார், லட்சத்தீவுகள், டையூ - டாமன், தாத்ரா -நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களின் காவல் பணிகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டில் விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த பணிகளின் கள யதார்த்தத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையரிடம் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது” என்று கூறியிருந்தது.ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறை சார்ந்த பணிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பை பறிப்பதுடன், இனி வரும் காலங்களில் புதிதாக எந்த ஒரு மாற்றுத்திறனாளிகளும் பாதுகாப்புத் துறைகளில் எந்தவொரு பணிக்கும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக பாதுகாப்புத் துறை சார்ந்த பணியிடங்களுக்கு உள்ளேயே மாற்றுத் திறனாளிகள் நுழைவதை முற்றிலும் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது அநியாயமானது மட்டுமன்றி, எதேச்சதிகாரமானது என்று மாற்றுத் திறனாளிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மோடி அரசின் இந்த சட்ட விரோத, மாற்றுத்திறனாளிகள் விரோத அறிவிப்பை கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகம் முன்பு செப்.14 அன்று மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

;