tamilnadu

img

புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ்

சென்னை, பிப்.05-
வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அரசு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகம். அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்" என்று தெரிவித்துள்ளார்.

;