tamilnadu

img

தமிழகத்தில் முதல் முறையாக மும்பரிமாண முறையில் நகல் எடுக்கப்பட்ட நடுகல்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக யாக்கை மரபு அறக்கட்டளை ஒரு நடுகல்லினை முப்பரிமான முறையில் ஸ்கேன் செய்து அதனை நகல் செய்து கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. யாக்கை குழுவினரின் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் உதவியுள்ளனர். 
டிஜிட்டல் முறையில் நமது கல்வெட்டுகளை எவ்வாறு ஆவணப்படுத்துவது என சிந்தித்து அதன் வெளிப்பாடாக இந்த முப்பரிமான ஸ்கேன் அமைந்தது. தமிழ்நாட்டில் இதுவரை  இப்படியான ஒரு முயற்சி நடைபெறவில்லை என்பதால் மிகுந்த சிரத்தையுடன் இம்முயற்சியை யாக்கை குழு முன்னெடுத்துள்ளது.
நடுகல் மரபின் வேர்கள் ஆழமானவை. அறிவியல் சார்ந்த ஆய்வுகள் மேலும் புத்தொளி பாய்ச்சும் என எழுத்தாளரும், சிந்து வெளி ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். 

;