tamilnadu

பிப்ரவரி 11 சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூகநீதி சாசனம் வெளியீடு....

சென்னை:
தீண்டாமை, வன்கொடுமை, இட ஒதுக்கீடு, நிலம், பண்பாடு,கல்வி,வேலை எனப் பல்வேறு தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பணி செய்து வருகிறது. 

அந்த வகையில் தலித் மக்களின் பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கி வருகிறது. அக்கோரிக்கைகளை 2021 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு எடுத்துச் செல்லவும் தீர்மானித்துள்ளது. எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் “சமூகநீதி சாசனம்” சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு தினமான பிப்ரவரி 11அன்று காலை10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளியிடப்படவுள்ளது. அரசியல் கட்சிகளும்,அனைத்துப் பகுதி பொதுமக்களும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு,  பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;