tamilnadu

img

நாடு முழுவதும் மின் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்....

சென்னை:
மின்சார சட்டத்திருத்த மசோ தாவை கைவிடக்கோரியும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் மின் ஊழியர்கள், பிப்ரவரி 3அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்ஊழியர் (சிஐடியு)  மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசு மாநில மின்வாரியங்களை சிதைத்து அம்பானி, அதானி வகையறாக்களுக்கு கொடுத்து மின்சாரத்தை சந்தைப் பொருளாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதை அமலாக்க மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மின்சாரம், அதுவும் அதானி பவர் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியினுடைய மின்சாரமாக இருக்க வேண்டுமென கருதுகிறார்கள். இந்திய நாடு முழுவதும் விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் விவசாயிகளின் மற்றொரு கோரிக்கையான மின்சார சட்டத்திருத்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ள னர். ஆனால் எந்த நேரத்திலும்கொல்லைப்புற வழியாக அமலாக்க மத்திய அரசு செல்லும் என்பது நாடறிந்த ரகசியம்.

மின்சார சட்டத்திருத்த மசோதா அமலாகாத நிலையில் அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு ஏல நடைமுறைகளை மெல்ல மெல்ல தனியாகஅமலாக்கம் செய்ய மாநிலஅரசுகள் நிர்ப்பந்திக்கப்படு கின்றன. அதன் ஒரு பகுதிதான் மின் உற்பத்தி மற்றும்விநியோகத்திலும், பரா மரிப்பதிலும் (works contract) என்ற பெயரால் தனியாரிடம் வழங்கி படிப்படியாக தனியார் மயமாக்க முயற்சிப்பதில் ஒரு அங்கம் எனக் கருத வேண்டியுள்ளது.தற்போது கூட மத்திய நிதி
யமைச்சர் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கிட நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவித்திருப்பது,  பொதுத்துறைகளை சீரழிக்கின்ற மத்திய அரசின் கொள்கையை உறுதிப் படுத்தியுள்ளது.மின் உற்பத்தியும், மின் விநியோகமும் தனியாரிடம் சென்றால், அரசுத்துறையில் வேலைவாய்ப்பு என்கின்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின்   கனவு சிதைந்து போகும்.‘அமர்த்து, துரத்து ’ (Hire and Fire) என்ற அடிப்படையில் அமலாகும். இதை மின் ஊழியர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

அதேபோல விவசாயிகளுக்கான இலவச மின்சாரம்ரத்தாவதோடு, அதற்கு வழங்கப்படுகின்ற மானியம், மாநில அரசுகளால் மின்வாரியங்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைக்கு  மத்திய அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது.அதேபோல வீடுகள், கைத்தறி, நெசவு உள்ளிட்டவை களுக்கு வழங்கும் மின்சாரத் திற்கான மானியமும் ரத்து செய்ய நேரிடும். சிறு, குறு தொழில்கள் பாதிப்படையும் நிலை உருவாகும்.சுதந்திரத்திற்கு பின் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் வளர்ச்சியடைந்த மாநில மின்சார வாரியங்கள்; அதன் மூலம் உருவான பசுமைப்புரட்சி, தொழில் வளர்ச்சி என படிப்படியாக தேசத்தின் முகத்தோற்றம் மாறும் நிலைக்கு தள்ளப்படும் அவலநிலை உருவாகும்.எனவே தான் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிடக்கோரியும் காலிப்பணியிடங் களை நிரப்பிடக்கோரியும் அனைவருக்கும் மின்சாரம்,மக்கள் வாங்கும் விலையில்மின்சாரம் என்ற கோரிக்கை களை முன்வைத்து இந்திய நாடு முழுவதும் மின்வாரிய பணியாளர்கள் பிப்ரவரி 3ல்வேலை நிறுத்தம் மேற்கொள்கிறோம். இந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென  கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

;