tamilnadu

img

வங்கியில் பணம் செலுத்திய பிறகே மின்கோபுர பணிகள்.. விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்...

சென்னை:
விவசாயிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்திய பிறகே மின்கோபுர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் இழப்பீடு வழங்காமல் உயரழுத்த மின்கோபுரம் அமைக் கும் பணி குறித்தும், கிணறுகளுக்கு இழப்பீடு தீர்மானிக்காதது குறித்தும், விவசாயிகள் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில், தமிழ்நாட்டில் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகமும் உயர
ழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் பல்வேறு விதமான இழப்புகளுக்கு விவசாயிகள் ஆளாகின்றனர். இதில் குறிப்பாக, திறந்தவெளி கிணறுகளுக்கு இழப் பீடு வழங்குவது சம்பந்தமாக அரசாணையில் குறிப்பிடப்படாததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 137 கிணறுகளுக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிணறுகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு வழங்க வேண் டிய இழப்பீடு முழுவதையும் அவர் களுடைய வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகே மின்கோபுர பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். பணிகளை முடித்துவிட்டால் அவர்களிடமிருந்து இழப் பீட்டை பெற முடியாமல் தாங்கள் ஏமாற்றப்படுவோம் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. எனவே, இப்பிரச்சனையின் மீது தாங்கள் தலையிட்டு விவசாயிகள் நலன் களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இச்சந்திப்பின் போது மாநில துணைச் செயலாளர் பி.டில்லிபாபு உடனிருந்தார்.

;