tamilnadu

img

காவிரி டெல்டா பாசன வாய்க்கால்களை தூர்வாருக... விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்.....

சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மேட்டூர் அணையில் தற்போது 98 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு இந்த ஆண்டு ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறப்பதற்கான சகல வாய்ப்புகளும் உள்ளது. பருவமழை உரிய காலத்தில் துவங்கி நல்ல மழை பெய்தால் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.எனவே, இத்தகைய சூழலில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆறுகள், கிளை வாய்க்கால்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேரவும், தண்ணீர் வீணாகாமல் பாசனத்திற்கு பயன்படவும் தூர்வாரும் பணியை சிறப்பாகவும், துரிதமாகவும் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;