கூகுள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றப் பரிந்துரைக்கிறதா?
உலகின் பெரும்பாலான பயனர்கள் கூகுள் நிறு வனத்தின் ஜி-மெயில் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் அனுப்புவதற்கு, மொபைலில் உள்ள செயலிகளைப் பயன்படுத்துவதற்கு, தரவுகளை சேமித்து வைப்பதற்கு மற்றும் பல்வேறு சேவைகளுக்கு கூகுள் கணக்கு பயன்படுகின்றது. சில சமயங்களில் கூகுள் உங்கள் பாஸ்வேர்டை மாற்ற பரிந்துரைப்பதுண்டு. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
பாஸ்வேர்டை மாற்ற கூகுள் பரிந்துரைப்பது ஏன்?
உங்கள் கூகுள் கணக்கில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருந்தாலோ அல்லது உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டதைக் கண்டறிந்தாலோ, பாஸ்வேர்ட்டை மாற்றும்படி கூகுள் பரிந்துரைக்கிறது.
கணினியில் பாஸ்வேர்ட்டை மாற்றுவது எப்படி?
கணினியில் பாஸ்வேர்ட்டை மாற்றுவது எப்படி?
1. கூகுள் கணக்கை login செய்து “Security” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, “How you Sign in to Google” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
2. அதில் Password என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. அதில் உங்கள் புதிய பாஸ்வேர்டை கொடுத்து “Change Password” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்கள் பழைய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் மொபைலில் பாஸ்வேர்ட்டை மாற்றுவது எப்படி?
1. உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள Settings ஆப்ஷனுக்கு சென்று “Google” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து “Manage your google Account” என்பதை தேர்வு செய்யவும்.
2. அதில் Security என்ற ஆப்ஷனை தேர்வு செய்து Password என்ற ஆப்ஷனுக்கு சென்று “Change Password” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது புதிய பாஸ்வேர்டை கொடுத்து பழைய பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.
பாஸ்வேர்டை மாற்ற அடிக்கடி கூகுள் பரிந்துரைத்தால் என்ன செய்ய வேண்டும்?
1) உங்கள் கூகுள் குரோமில் உள்ள Cache and cookies-யை டெலிட் செய்யவும்.
2) உங்கள் Antivirus மென்பொருளை அப்டேட் செய்து, உங்கள் கணினியை ஸ்கேன் செய்து வைரஸ்களை டெலிட் செய்யவும்.
3) தேவையற்ற மென்பொருள்களை டெலிட் செய்யவும்.