சென்னை:
திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.