tamilnadu

img

மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் திமுக வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்....

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் மே 6 வியாழனன்று எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆர்.எம்.வீரப்பனின் குடும்பத்தினர் உள்ளனர்.

                                                    ***************

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

                                                    ***************

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முனைவர் கோவை செழியன் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ். ராமலிங்கம் ஆகியோர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

                                                    ***************

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

;