tamilnadu

img

திமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....

சென்னை:
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.

 நடந்து முடிந்த சட்டப்பேரவையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி 156 இடங்களில்வெற்றிபெற்று அதிப்பெரும்பான்மை யுடன் திமுக ஆட்சியை கைப்பற்றி யுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்றகுழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டது. அந்த கடிதத்துடன் அமைச்சரவை பட்டியலும் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி அமைக்க முறைப்படி ஆளுநர் அழைப்புவிடுத்ததைத் தொடர்ந்து, மே 7 அன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

மூத்த தலைவர்கள் வாழ்த்து
இதனையடுத்து, சுதந்திரப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு, எம்ஜிஆர் கழக தலைவர் எம்.ஆர்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரை சந்தித்த மு.க.ஸ்டாலின் வாழ்த்துப்பெற்றார். 

அமைச்சரவை
இதற்கிடையில், 16வது சட்டப்பேரவையில் அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களின் பட்டியலை ஆளுநர் அறிவித்தார். அந்த பட்டியலில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி,கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர். பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், மு.பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், கா. ராமச்சந்திரன், வி. செந்தில்பாலாஜி உள்ளிட்ட 19 பேர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள். 

புதுமுகங்கள்
இந்தப் பட்டியலில் 15 பேர் புது முகங்கள். இவர்களில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள்நுழையும் ராசிபுரம் தொகுதி மா.மதிவேந்தன், தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை தோற்கடித்த என். கயல்விழி  செல்வராஜ் இருவரும் அமைச்சர்களாகின்றனர். இவர்களுடன் எதிர்க் கட்சி கொறாடாவாக செயல்பட்டு வந்த ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணி, ராணிப்பேட்டை ஆர். காந்தி, சைதாப்பேட்டை மா. சுப்பிரமணியன், மதுரை கிழக்கு தொகுதி பி. மூர்த்தி, மதுரை மத்திய தொகுதி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், குன்னம்தொகுதி எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை துறைமுகம் பி.கே.சேகர்பாபு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், ஆவடி சா.மு.நாசர், திருவெறும்தூர் அன்பில் மகேஷ், ஆலங்குடி சிவ.வீ. மெய்யநாதன், திட்டக்குடி சி.வி.கணேசன், பத்மநாபபுரம் மனோதங்கராஜ் ஆகியோர் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

;