சென்னை, ஜூலை 13- விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதிக்கு நடை பெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்று ஏ.சிவசண்முகம் 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஜூலை 10 அன்று நடைபெற்ற தேர்தலில், 762 அஞ்சல் வாக்குகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 96 ஆயி ரத்து 233 வாக்குகள் பதி வாகி இருந்த நிலையில், சனிக் கிழமையன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில் அஞ் சல் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு இயந் திரத்தில் பதிவான வாக்கு களும் எண்ணப்பட்டன.
14 மேஜைகளில் மொத் தம் 20 சுற்றுகளாக நடை பெற்ற இந்த வாக்கு எண்ணிக் கையில், துவக்கம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பல ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் முன் னிலை பெறத் துவங்கினார். இதில், பிற்பகல் 2.30 மணிக்கு முடி வுற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 493 அஞ்சல் வாக்குகள் உட்பட 1 லட் சத்து 24 ஆயிரத்து 053 வாக்கு களைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இது பதி வான வாக்குகளில் 63.22 சதவிகிதம் ஆகும்.
பாமக வேட்பாளர் சி. அன்புமணி 222 அஞ்சல் வாக்குகள் உட்பட 56 ஆயி ரத்து 296 வாக்குகளையும் (28.69 சதவிகிதம்), நாம் தமி ழர் கட்சி வேட்பாளர் அபி நயா 41 அஞ்சல் வாக்குகள் உட்பட 10 ஆயிரத்து 602 (5.4 சதவிகிதம்) வாக்குகளை யும் பெற்று தோல்வி அடைந் தனர்.
விக்கிரவாண்டி தொகுதி யில் மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ள னர். நோட்டாவுக்கு 859 வாக்கு கள் பதிவாகின. அஞ்சல் வாக்குகளில் 36 செல்லாத வையாக அறிவிக்கப்பட்டன.
மதவெறி பாஜக - பாமக சந்தர்ப்பவாத
கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம்!
விக்கிரவாண்டி மக்களுக்கு சிபிஎம் பாராட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: “விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி அவர்களின் மறைவையொட்டி நடை பெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பா ளர் அந்நியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு வாக்களித்த வாக்கா ளப் பெருமக்களுக்கும், உழைத்த இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
“இத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறி வித்தது. ஆனால், இத்தேர்தலில் 83 சதவிகித வாக்கு கள் பதிவாகியுள்ளதன் மூலம் அதிமுகவின் முடிவினை மக்கள் நிராகரித்துள்ளனர். கடந்த 2021 தேர்தலில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக, இம்முறை 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது என்பது இந்தியா கூட்டணியின் செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டாகும்” என்று குறிப்பிட்டுள்ள கே. பாலகிருஷ்ணன், “நாடாளு மன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் 40க்கு 40 வெற்றி பெற்று சாதனை படைத்த இந்தியா கூட்டணிக்கு விக்கிர வாண்டி இடைத்தேர்தல் வெற்றி மேலும் ஒரு மைல் கல்லாகும். மதவெறி பாஜக - பாமக சந்தர்ப்பவாத கூட்ட ணிக்கு மக்கள் மீண்டும் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
2019 முதல் தொடரும் இந்தியா கூட்டணி வெற்றி!
முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, ஜூலை 13- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற் றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:-
அது சாதாரண வெற்றியல்ல!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட் டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றி யை திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி பெற்றது. அது சாதாரண வெற்றி யல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி யைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது.
இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி உடல்நிலை கார ணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து இடைத் தேர்தலை எதிர்கொள்ள வேண் டிய சூழல் ஏற்பட்டது.
பின்வாங்கியது அதிமுக!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திமுகவின் வெற்றி வேட்பாளராக அன்னி யூர் சிவாவை அறிவித்தோம். நாடாளு மன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்வி யிலிருந்து எழ முடியாமல் இருந்த அதி முக, விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் அதே படுதோல்வியைத் தான் சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது.
விலகாத பாமகவின் மர்மம்!
பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது. ‘இடைத்தேர்த லிலேயே நிற்பது இல்லை’ என்று வைரா க்கியமாக இருந்த பாமக விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்த மர்மம் இன்னும் விலகவில்லை. தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி.
வீணர்களை விரட்டியடித்த மக்கள்
அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீது குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக் காடு தோல்வியை மறைப்ப தற்காக மிக கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்கா ரர்களின் பகல் வேஷப் பரப் புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டி அடித்து விட்டார்கள்.
அனைவருக்கும் நன்றி!
தமிழ்நாட்டின் வளர்ச் சிக்கு, மக்களின் முன்னேற் றத்திற்கு திமுக என்றும் எப்போதும் தேவை என் பதை இந்த இடைத்தேர்த லில் மூலம் எடை போட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மன மார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
நேர-காலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.
திமுக பொதுச்செயலா ளர் துரைமுருகன், அமைச் சர்கள் க. பொன்முடி, ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தோழர்கள் என்று இந்த வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன் னாலும் தகும்.
பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக!
அதே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்த லில் இந்தியா கூட்டணி கட்சி கள் 11 இடங்களில் முன்னணி யில் இருக்கிறது. பாஜக தோல்வியை தழுவி இருக்கி றது. நாடாளுமன்றத் தேர்த லில் ஆட்சி அமைக்கும் பெரும் பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தய வால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத் தேர்தலில் தொடர்கிறது.
தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலை மையிலான இந்தியா கூட்ட ணியின் வெற்றி தொடர் கிறது. திமு கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றி யாக விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றியும் அமைந் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
இனிப்பு வழங்கிய முதல்வர்
முன்னதாக திமுக வேட் பாளர் அன்னியூர் சிவாவின் இந்த வெற்றியை, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடி னர். சென்னை அண்ணா அறி வாலயத்தில் திரண்டிருந்த தொண்டர் களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்.